Monday, May 6, 2019

அவனது இலட்சியங்களில் சிறுநீர் கழித்தவர்கள்

நேற்று அவனது
கனவு பற்றி
காறி உமிழ்ந்துவிட்டுச்
சென்றனர் சிலர்!
அவனது
கனாவின் வாசலில்
சூரியன் கட்டித்
தொங்கவிட்டிருப்பதை
அவர்கள்

கண்டுகொள்ளவேயில்லை
அது
அவர்களுக்கும் உரியது என
அவர்கள்
புரிந்து கொள்ளவுமில்லை!
அரிஸ்ரோட்டிலும்
பிளேற்றோவும்
..........................
நிராகரிக்கப்பட்ட வரலாறுகள்
இன்னும் முற்றுப்பெறவேயில்லை!
அடுத்த கட்டம்
அவன்
இறந்துவிட்டதாக
அறிவிக்கப்ட்டது!
அவனது
இலட்சியங்களில்
சிறுநீர் கழித்தவர்கள்
அவன் வைத்திருந்த
ஞாபக மூட்டையினை
அவிழ்த்துப் பார்த்தனர்!
அங்கும்
குட்டிக் குட்டிச் சூரியன்களும்
அவனால் அவர்களது
வாசனைக்காகச் சேகரிக்கப்பட்ட
பூக்களும்...

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect