Monday, May 6, 2019

முந்தநாள் முதுகு சொறிந்தவன்

என்னைத் தோண்டி வெளியில்
போடுவதற்கு
பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
ஒளியினால்
உருவாக்கப்பட்ட
என்னைக் கண்டு


அமாவாசையொன்று
புதைத்துவிட்டுப் போனது!
எனக்குப் பக்கத்தில்
இன்னும் சிலர்
புதைக்கப்பட்டிருந்தனர்!
கைகுலுக்கி விட்டு
கண்ணீரால்
பதில் சொன்னார்கள்!
இதுதான் நியதியென்று!
இந்தப்பதில்
எனக்குப் பிடிக்கவில்லை!
முந்தநாள்
முதுகு சொறிந்தவனின்
உச்சந்தலையில் – இன்று
பூப் பூத்துக் கிடக்கும் போது…
ஒரு யுகத்துக்கான
வெளிச்சத்தினை ஏந்தியிருக்கும்
நாம்
நம் உள்ளேயிருக்கும்
எரிமலைக் குழம்பினை
கவனிக்காமலே விட்டிருக்கிறோம்!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect