Monday, May 6, 2019

அதிசயமான இடைவெளிகளில் நின்று உரையாடுகின்றோம்

எமது சுவாசப் பையை
அவர்களிடம் கொடுத்துவிட்டு
மூச்சு விடுவதற்காய்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
நெஞ்சிலும் நினைவிலும்
ரத்தம் சொட்டும்

நேற்றுக்கள் அவர்களுக்கான
வார்த்தை ஊற்றுக்கள்!
எங்கள்
பிணங்களைக் கிடத்திவிட்டு
பிழைப்பு
நடத்துகிறார்கள்!
சுடுகாடுவரை
கூட்டிச்செல்வதற்கான
சூட்சுமங்கள்
மட்டுமே அவர்களிடமுண்டு
வாசல்வரை
வசந்தம்
கொண்டு வருவதாக
வாயினால் மட்டுமே
வடை சுடுகிறார்கள்!
எங்கள்
பசியையும் தாகத்தையும்
அடகு வைத்து விட்டு
ஒருபெரு வலியுடன்
முறிந்து போன கனவுடன்
அதிசயமான
இடைவெளிகளில் நின்று
உரையாடுகின்றோம்!

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect