Monday, May 6, 2019

விடியட்டும் காத்திருக்கிறேன்

பெரும் கைதட்டல்களுடன்
மீண்டும்
ஆரம்பிக்கின்றன
புதிய அலப்பறைகள்!

நான் என்

வழமையான பாடலோடு
இன்று எழுந்திருக்கவில்லை.
என்கூரிய பற்களுக்கிடையே
இறுகப் பற்றிக்கொள்கிறேன்
எனக்காக வீசிய
வெறுப்புக்களை…!

எனது அர்த்தங்களை
விழுங்கிய மௌனம்
இன்னும்
அந்தரத்தில்
தொங்கிக்கொண்டிருக்காது!

கிழித்தெறியப்பட்ட
என் ஆதங்கங்களை
அள்ளியெடுத்து வைத்திருக்கிறேன்!

நடுங்கி நடுங்கி
பயணம் செய்யும்
மூச்சுக்களை நேற்று
அடி அடியென அடித்து
நிமிர்த்தியாச்சுது!

மிக நிச்சயமாய்
உதிரத்தொடங்குகின்றன
இருளொன்றின் அச்சமூட்டும்
சிறகுகள்!

விடியட்டும் காத்திருக்கிறேன்
எனக்கான பாடலை
நான் விட்டுச்சென்ற
இடத்திலிருந்தே
மிகவும் குரலெடுத்துப்பாடுவேன்!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect