Monday, May 6, 2019

நீங்களோ உங்களின் எதிர் மறைகளின் கழிவறைகளிலிருந்து

உங்களால் என்னை
வாசிக்க முடியாத போது
எழுத்தேயில்லை என்கிறீர்கள்!
எனது கரைக்குக் கூட
நீங்கள் வந்திருக்கவில்லை
ஆனால்


ஆழமில்லை என்கிறீர்கள்!
கண்ணீரில் நீந்தி
ரத்தம் துடைத்தே
கவனிப்புக்குரிய இடத்திற்கு
வந்திருக்கிறேன்!
என் காயங்களின்
பின்னணிகளே
எனது போதி மரங்களாயின!
எனது கூடையில்
உங்களுக்கான அன்பு மட்டுமே
நிறைந்திருக்க…
நீங்களோ
உங்களின் எதிர் மறைகளின்
கழிவறைகளிலிருந்து
துப்புகிறீர்கள்!
தப்புக்களின் நிறுத்தங்களில்
நின்று கொண்டு
உங்கள் தவறுகளுக்கு
காற்புள்ளியிடுகிறீர்கள்!
சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கும்
எனது கோபத்தணல்களுக்கும்
உங்களது படிமங்களுக்கும்
தூரம் அதிகமில்லை!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect