Monday, May 6, 2019

இன்னும் விழுந்து கிடக்கிறேன்

இன்று நீ
கொழுத்திப் போட்டுவிட்டுப் போன
வார்த்தை

இருதயத்தைப் பொசுக்குமளவிற்கு
கனலைக் கக்கியது!
அந்த இடத்தில் தான்
இன்னும் விழுந்து
கிடக்கிறேன்!
அதெப்படி
ஒரு
வார்த்தையிலே
எல்லாவற்றிற்கும் சேர்த்து
உன்னால்
கல்லறை கட்டவிடமுடிகிறது!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect