Monday, May 6, 2019

என்னைப் போல் கடுமையாகத் தோற்றுப் போய் வா!

எங்கோ பிழைக்கிறது!
எனது
சமன்பாடுகள் எப்பொழுதும்
சரியான 
விடைகளையே
தந்திருக்கினறன!
அப்படியானால்
ஏன்

தடுக்கி விழுந்தேன்?
என்னைப் பகிர்ந்து கொள்ள
நான்
அனுப்பிய எதிர்காலம்
கிழிபட்டுக் கிடக்கிறது!
தயவு செய்து
என்னைப் புரிந்து கொள்ள
எத்தனிக்காதே!
அதையும் மீறி
என்னைத் தெரிந்து கொள்ள
வேண்டுமாயின்
என்னைப் போல்
கடுமையாகத்
தோற்றுப் போய் வா!
சூன்யத்திலிருந்து
கதையை
ஆரம்ப்பிப்போம்!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect