Monday, May 6, 2019

சிதறல்களை சேர்த்து எழுந்து வருவானென்று...

அவன் வாசித்து விட்டுப் போன
வீணை அப்படியே
கிடக்கிறது!
அவன் திரும்ப ஏறி வந்த
தோணியின் துடுப்பை


யாரோ பறித்துச் சென்றிருந்தனர்!
என்னிடமிருந்த
தைரியம் எல்லாவற்றையும்
அவனுக்குப் பரிசாகக்
கொடுத்திருந்தேன்!
மேலும்
அறிவித்தல் கிடைத்தது
பக்கத்தில் வீழ்ந்து
வெடித்த ஏதோவொன்றில்
அவன் சிதறிப்போனதாக...
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
சிதறல்களை சேர்த்து
எழுந்து வருவானென்று...
ஏனென்றால்
அது அவனது வீணை!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect