Monday, May 6, 2019

ஏனென்றால் எமது பிள்ளைகள் வெளிநாட்டில்…

கடக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஒட்டிக்கிடக்கின்றன 
வசந்தகால
ஞாபகத் திசுக்கள்!

குஞ்சுகளின்

தலைகோதத் துடித்து அவை
வெளியேறிய
அனாதைக் கூட்டின்
வெற்றிடத்தை தடவிப்பார்த்து
தவிக்கிறது மனசு!

எங்கோ எதற்கோ
எங்கள் சந்தோசங்களை
விழுங்கித் தொலைத்தது
வெளிநாட்டு விசா!

ஏகாந்தச் சுமையுடன் ஓடுவது
இப்போது எமக்குப்பழகிவிட்டது!

தாங்கள்
விலக்கழித்திருக்கும் வசந்தங்களிடம்
குந்தியிருந்து பேசுவதற்காக
விடுப்பில் வந்துவிட்டு
சுமையேற்றிவிட்டுச் செல்கிறார்கள்!

அவர்கள்
கைகாட்டி புன்னகைத்து
எங்கள் புன்னகைகளின்
கடைசிச் சொட்டையும்
வழித்துச்சென்றது
எப்படி புரியப்போகிறது!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...