Saturday, December 3, 2022

வேலை

 

சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.

இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

ஒவ்வொறு 20 ஆண்டுகளுக்கும் பெரும்பான்மை பணியாளர்களின் மனநிலை மாற்றமடைந்து வருகிறது. 60களில் Loyalty முக்கியமாக இருந்தது. சேர்ந்த கம்பெனியிலேயே ரிடயர்ட் ஆகும்வரை வேலை செய்தார்கள். 80களில் standard of living முக்கியத்துவம் பெற்றது. பணியாளர்கள் தமக்கு வீடு, நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விரும்பினர். இதனால் பத்து - பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறை  வேலையை மாற்றிக்கொண்டனர்.

 2000த்துக்குப் பிறகு freedom of choice தான் மற்ற எதையும் விட முக்கியம். 
பத்து வருடங்களுக்கு முன்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்கார்ட்டா எனும் உலகளாவிய என்சைக்ளோபீடியாவை உருவாக்க திட்டமிட்டது. அதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து, பல துறைகளைச் சார்ந்த மிகச்சிறந்த வல்லுனர்களை கட்டுரைகள் எழுத நியமித்தது. தனியாக பெரிய அணியையும் கட்டமைத்து, மிக அதிகமான செலவில் என்கார்ட்டா எனும் மின்மய என்சைக்ளோபீடியாவை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தது.

இன்னொறு பக்கம், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கட்டுரைகளுக்கு பத்து பைசா கூட சன்மானமாக தராமல், ஆர்வமும் அறிவும் இருப்பவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தமது ஓய்வு நேரத்தில் தமக்கு விருப்பப்பட்டதை எழுதி பங்களிக்கலாம் என்ற யோசனையுடன் வேறொரு மாடல் உருவானது. பிற்காலத்தில் அது மிகப்பெரிய தகவல் கருவூலமாக, விக்கிப்பீடியாவாக மாறியது.

 என்கார்ட்டாவை விட பல மடங்கு உயரத்துக்குச் சென்றது.
இது மிக முக்கியமான செய்தி. ஒரு செயலில் வெற்றியும், சாதனையும் நிகழ வெறும் சம்பளம், பணம் சார்ந்த இன்சென்டிவ்கள் உதவுவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், பொது தேவை குறித்த புரிதலுமே சாதனைகளை நிகழ்த்துகின்றன. 
கூகிள் தனது பணியாளர்களுக்கு மொத்த வேலை நேரத்தில் 20% நேரத்தை அவர்கள் விரும்பும் பணியை செய்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை அளித்தது. கூகிளின் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை அந்த 20% நேரத்தில் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, 2k கிட்ஸ்சை, சம்பளத்தை வைத்து மட்டுமே இன்ஸ்பையர் செய்ய முடியாது. அவர்கள், ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணி செய்ய, பங்களிப்பு செய்ய சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனை புரிந்துகொண்ட புதிய தலைமுறை நிறுவனங்களே சாதித்து வருகின்றன.

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...