Sunday, July 5, 2020

அளவில் பெரிய கோப்புக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? how to share big files online?


நாம் மின்னஞ்சலிலோ வேறு வழிகளிலோ இன்னொருவருக்கு தகவல் பரிமாறிக் கொள்ளும் போது, குறிப்பாக காணொளிகளை பகிரும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எம்மால் அனுப்பமுடிவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மென் பொருட்கள் அல்லது வலைத்தளங்கள் சம்பந்தமான பார்வையிது..

1. Google Drive

உலகமெங்கிலும் அதிக அளவில் பயன்படுத்தும் file sharing தளம் இதுவாகும். இதைப் பற்றிப் பெரிய அறிமுகம் தேவையில்லை. ஜிமெயிலில் பெரிய கோப்புக்கள் அனுப்புபவர்கள் இதைப் பயன்படுத்துவது வழக்கம். ஒரு மின்னஞ்சல் கணக்கிற்கு 15 GB வரை சேமிப்புப்புப்பகுதி இலவசமாகத் தரப்படுகிறது. அதற்கு மேல் தேவையாக இருந்தால் google cloud காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

2. 'WeTransfer' 

மிகச் சுலபமாகத் தகவல் பரிமாற்றம் (Data Transfer) செய்யக்கூடிய வசதியுள்ளதாக 'WeTransfer' என்னும் சேவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவும் குறிப்பிட்ட எல்லைக்கப்பால் பயன்படுத்த வேண்டியேற்படின் பணம் செலுத்த வேண்யுள்ளது.

3. Firefox Send

தகவல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்புவதற்கு சிறந்ததாக "Firefox Send" காணப்படுகின்றது. 2.5 GB அளவிலான தரவுகளைப் பதிவேற்றி, அதனைப் பாதுகாக்கவும் முடியும். இதே வசதிக்கு WeTransfer-ல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இவை தவிர இன்னும் சில தளங்களும் உள்ளன.
4. https://onedrive.live.com
6.   https://send-anywhere.com 
7.   https://www.filemail.com 
8.   https://transfer.pcloud.com

க.மோ.

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...