Tuesday, November 12, 2019

வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்"

கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...


ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.



வெல்லவூர் சுபேதன், பல்வேறு காரணங்களால் முற்றுகையிடப்பட்ட உணர்வுத் தளத்தினின்று அறிமுகமாகும் கவிஞன் என்பது  புத்தகத்தைப் படிக்கும் சிலநொடிகளிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.  தொடக்க நிலையில் கவிதைகளைப் படைப்போர் கவித்துவத்தில் அதிகம் கவனத்தில் கொள்ளாமல் கருத்துக்களிலேயே ஆர்வம் காட்டுவர். சமூகத்துக்கான அக்கறையும் தன்னுணர்வும் அணுவிலிருந்து ஆகாய வெளியளவுக்கு அகண்டிருக்கும். அதனால் அனுபவப்பரப்பு குறிப்பிட்ட எல்லைகளையே வகுத்துக் கொண்டிருக்கும்.

கொடுந்தனிமையும் நிராகரிப்பின் வலிகளும் இழந்தவற்றின் துயரங்களும் இழையோடும், சமகால வாழ்வின் அபத்தங்களை தரிசிக்கவும், அவலங்களை அடையாளம் காணவும் உதவும் சுபேதனின் கவிதைகளை எப்படிப் புரிந்து கொள்வது? அவரது கவிதைகளின் இதயத் துடிப்புகளைக் கேளுங்கள்! அதில் உங்களுக்கான துடிப்புக்களும் உள்ளன. அதன் அருகாமையை நழுவவிடாதீர்கள். அவற்றைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.

.............விடியல் என்ற சொல்லில் அஸ்தமனத்தை கண்டு ஏமாந்த உள்ளங்களின் வேதனையை, வாழ்வின் மீதான அனுமானங்களை ஓர் ஏக்கத்தொனியோடு வெளிப்படுத்துகின்றார் தமது கவிதைகளில். 

"மழையோடு விளையாடு" எனும் கவிதை, மழை மீதான இவரது காதலை வெளிப்படுத்தி நிற்கின்றது. பழைய ஞாபகங்கள் கோர்க்கிற போது மழை மணக்கிறது. மண்ணின் வாசம் கிளரச் செய்யும் மழைத்துளிகள் மேகத்திலிருந்து கீழிறங்கும் தருணத்தை, 

துமியதாய் தூவியே
துளியதாய் மாறிடும்
மழையோடு விளையாடு
மனதார மகிழ்ந்தாடு

எனக் களிக்கின்றார். சின்னச் சின்ன மழைத்துளிகளை மனசுக்குள் கடலாக ஒளித்து வைத்திருக்கிறார். மென்காற்றில் சிதறும் சாரலில் நனைந்தபடி ஒரு குழந்தையாய் குதூகலிக்கிறார். என்னை நனைத்த மழைச்சாரலே என் உயிரில் எப்படி நிரம்பிக் கொண்டாய்? என்றும் மழையை ஆச்சர்யக் கண்கொண்டு பார்க்கிறார். 

மீட்பதாகப் பிதற்றும் அர்த்தங்களை நெம்புவதற்கு திராணியற்ற பேனாவை, யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும் கல்வித்திட்டங்களின்படி காலத்தை உருட்டியபடி நகரும் இன்றைய கல்வி முறையினை 'நற்கல்வி கற்றிடுவீர்' எனும் கவிதையில் கேள்விக்குட்படுத்துகின்றார்.

காசும் பணமும் கற்றிடச் செலுத்தி
வீசும் குப்பையை விரைந்தே நுகர்ந்து
பேசும் மொழியில் விடம் தனைக்கலந்து
கூசும் வார்த்தைகள் விரும்புதல் தகுமோ
என்ற கேள்வி அர்த்த புஸ்டியாய் மேலெழுகிறது.
புலம் பெயர்வுப்பட்டம் எனும் கவிதை, 
ஈடும் நிமிர்த்த வழியேதும் இன்றி
வீடும் வாசலும் இழந்தே தவித்து
கூடும் உயிரும் தனித்தனியே புலம்ப 
நாடும் கடந்ததால் புலம்பெயர்வுப் பட்டம்

என வந்த இடத்தின் வந்த சுவடுகளின் வலியினைத் தடவிப்பார்த்து எழுந்து நிற்கும் பெருமூச்சுக்களின் பேரொலி நம் காதுகளையும் அடைக்கச் செய்கிறது. 'ஓலச்சத்தம்" எனும் கவிதையில் தன் அடையாளத்தினை பதிக்கத் தொடங்குகிறார். வாழ்வியல் முரண்களை சொல்லிலும் பொருளிலும் கலந்து தருகின்றார். தொல்காப்பியர் செய்யுளியலில் தொடை வகைகள் பற்றிக் கூறுமிடத்து, 'மொழியினும், பொருளினும் முரணுதல் முரணே' என்கிறார். சொல் முரண், பொருள் முரண், நிகழ்ச்சி முரண், உணர்ச்சி முரண், தத்துவ முரண், உவமை முரண், நோக்கு முரண், உரையாடல் முரண், தலைப்பு முரண் என கவிதைக்கு முரண் அழகு சேர்க்கும். "ஓலச்சத்தம்" கவிதை முழுக்க முரண் உத்தியையே கையாள்கின்றார்.

ஓலைக் குடிசை ஒழுகுதென்று
ஓட்டையெல்லாம் நானடைப்பதா
ஓடும் நீரில் விளையாடும் 
ஓடம்கண்டு நான் மகிழ்வதா..

அவரது புத்தகத்தின் தலைப்புக்கூட ஒரு உருவக முரண்தான். "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்". அவர் கூறுகிறார்.

குயில்களும் சிலகாலம் இரவலாய் 
இராக்களை கழிக்கின்றன
காக்கையின் கூட்டில் 

என்பதில் பாடும் குயிலின் அழகைப்பற்றிக் கூறினாலும் இரவல் வாழ்க்கையின் அவலத்தை முரணாக ஓங்கி அறைந்து செல்கிறார் தனது கவிக்கரங்களால்.

மாயங்கள் எல்லாம் எம்மைச்சூழ
அபாயங்கள்தானே ஆட்டம் போடும்
தாயங்கள் போல வாழ்வை நகர்த்த
காயங்கள் தவிர்த்து வாழவேண்டும் எம்மினம் 

என மரணத்துள் வாழ்வைத் தேடுவதாக "கடல் மாதா நீயே காப்பு" எனும் கவிதை அமைகிறது. அவரது சொற்களும் படிமங்களும் வரட்சி, பாலை என அலைந்து திரிவதைக் காண்கிறோம். தன்னுணர்ச்சியின் அலைவு மனம் அது.

என்னையே தேடி
மின்சாரப்பார்வையால்
இழுத்து அணைத்து – நினைவிலும் அவள் இதம்

எனத் தொடர்கிறது ஒரு காதல் கவிதை. மெய்த்தேடலை மையமாகக் கொண்ட இக்கவிதைகள் புறத்தோற்றத்தில் காதல் கவிதைகளைப் போலவே தோற்றமளித்தாலும் அவை சுட்டும் பொருள் வேறு. காதலின் ஏக்கம் என்பது உடல்சார்ந்த வேட்கையில்லை. விடுதலையுணர்விற்கான தேடலே இக்காதலின் நோக்கம். அவர் பல்வேறு பாடுபொருள்களில் அதிக காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார். உதிர்ந்த கனவுகளை காதலிக்காக இன்னும் பொறுக்கி வைத்திருக்கிறார். சிதறிக்கிடக்கும் எண்ணங்களின் நடுவே காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை வலியுடன் நோக்குகிறது அவரது கவிதை. தீராப் பசியுடன் அன்பின் வானம் தேடி கதறியழுகின்றன.  "புலம் பெயர் தேசத்தில் ஒரு குரல்" எனும் கவிதை,

தொற்றிய நெருப்பில் அங்கே நாற்புறமும்
பற்றி எரிகையில் என் மனதில்
வெட்டிய வாய்க்கால் நீரோடை போலவே
முட்டி மோதி ஓடுது என் குருதி...
பட்ட கடன் தீர்க்கவென்றே
விட்டு வந்த மனைவியையும்
பிள்ளையையும் நினைத்து நினைத்தே பாதி உயிர்
போயிங்கூட சொட்டும் துன்பம் தீரல்லையே... 

என பாலை வன அவலங்களைப் பேசுகிறது அக்கவிதை. "ஆத்தா மனசு தங்கம் புள்ள" எனும் கவிதை அம்மாவைப்பற்றிய பாடலாகும். கவிதை மனமே ஒரு வித இசைத்தன்மை கொண்டதுதான். அது தன் அனுபவங்களை, சம்பவங்களை  இசைத்தன்மை கொண்ட மொழியில்தான் அடுக்கிப்பார்க்கிறது.

பத்து மாசம் சுமந்த கத
பத்மா அக்கா சொல்லையில
பல்லு ரெண்டு கிட்டிப்போயி
பட்டு மேனி வதங்கிடுச்சு... எனத் தொடங்கி 
ஆத்தா ஆத்தான்னு
ஆயிரம் மொற சொன்னாலும்
ஆத்தா பட்ட கஸ்டத்துக்கு
ஆறுதல் எண்டா அது நான்தா... என முடிக்கிறார்.

திரும்புதலின் எல்லை வரை நடக்கத் தூண்டுகிற உணர்வெளுச்சியாய் வெளிநாட்டு நடைப்பிண வாழ்க்கையை ஒரு சிறு விசும்பல் தடவித்தருகின்றார் "யாரிடம் கேட்பது யாசகம்' எனும் கவிதையாய்..

பாடும் குயில்களுக்கு 
கூடு இல்லை – ஆனால்
எனக்கோ கூடு மட்டும்தான்

காலத்தை நொந்து என்ன செய்ய முடியும். பறவைகளின் ஒலி அடங்கும் நேரம் அந்தப்பறவை தன் கனவைத் தொலைத்த அந்த மாலையில் இலவுகாத்த கிளியாக மாறியிருக்கலாம். "ஏழை வீட்டு இதயம்" எனும் கவிதை பெண்ணின் அவஸ்தையைப் பேசுகிறது.

சாமக்கோழிக்கு விடிஞ்சிருச்சி
சமஞ்ச பொண்ணெனக்கு இன்னும் விடியல்லையே...
தேதி மேல தேதி வச்சு நல்ல சேதி ஒண்ணு
கிட்டுமென்னு பாதிவாழ்க்கை
நரை முடியுயோட போச்சு
மீதியென்ன நடக்கப்போகுதோ
வெல்லவூர் ஆத்தா நீதான் கருண காட்டணும்..

யதார்த்தவாதி வெகுசன விரோதிதானே அதனால் யதார்த்தங்கள் உளறல்களாகவே வரவு வைத்துக்கொள்ளப்படும். பற்றாளன் ஒருவனின் உளரல் எனும் கவிதை இருண்டு கிடக்கும் சமகாலம் பற்றிப் பேசுகின்றது. 

ஓட்டிச்செல்லப்பல்சர் பைக்காம்
ஓரப்பாக்கெட்டில் ஒரு செல்லாம்
ஓரிடத்தில் நில்லாமல் வீதியில்
அநியாயமாய் சுத்தி விணாகுதுகளாம் 

எதிர்காலத்தின் சாத்தியங்கள் ஏதுமற்ற பொழுதொன்றில் நமக்கொரு உடைந்த பொம்மையை பரிசளித்து சிரிக்கிறது காலம். 'அழகான பொய்கள்" கவிதை "பொய்மை வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பெயக்குமெனின்" என்பதற்காக எடுத்ததுக்கெல்லாம் பொய்யா எனக் கேட்பதாக அமைகின்றது. குற்றத்தின் முன் மண்டியிடும் பாவங்கள் முகமூடிகளாகத் தயாரிக்கப்படுகின்றனவோ எனும் கேள்வியெழுகிறது..

நீங்கள் அனுமானித்த
பொய்கள் எல்லாம்
நிச்சயம் ஒருநாள் உருப்பெருத்து நிற்கும்
உங்கள் முன்னிலையில்..
அது வரை 
நீங்களும் பொய்களை 
அழகென்று ஒரு பொய் சொல்லுங்கள்

கடைசிவரிகளில் கண்ணி வைக்கிறார் சுபேதன். பொய் தின்ற வாழ்வுக்கும் அதன் மீட்சிக்குமான பாலமாகத் தன் கவிதைகளைப்பயன்படுத்த முயல்கிறார். மெல்லிய தென்றலைப் போல நம்மீது படர்ந்து தன் அனுபவங்களை தனது பிரத்தியேக மொழியெனும் வாசனையால் நம் மீதும் தடவிவிடுகிறார். சமூகவாழ்வின் சாத்தியப்பாடுகள் குறித்து சிந்திக்கும் சுபேதனின் கவிதைகள் வடிவ எளிமையானவை ஆனால் அவற்றின் கருத்துக்களோ வலிமையானவை, சமகாலத்துக்குத் தேவையானவை. இன்னும் புதிய திசைகளில் பயணிக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

க.மோகனதாசன்

2 comments:

  1. Did you hear there is a 12 word sentence you can tell your man... that will induce deep feelings of love and instinctual attractiveness for you buried within his heart?

    Because deep inside these 12 words is a "secret signal" that fuels a man's impulse to love, cherish and protect you with his entire heart...

    12 Words That Fuel A Man's Love Response

    This impulse is so built-in to a man's genetics that it will make him work harder than ever before to love and admire you.

    In fact, triggering this influential impulse is absolutely essential to getting the best ever relationship with your man that once you send your man a "Secret Signal"...

    ...You will instantly find him expose his mind and soul to you in such a way he never experienced before and he'll recognize you as the one and only woman in the galaxy who has ever truly interested him.

    ReplyDelete
  2. Best Online Casino in Australia | The best australian open 2021 betting fun88 fun88 dafabet dafabet 928Week 5 over under picks - casinoland.jp

    ReplyDelete

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...