Wednesday, May 7, 2025

“டூரிஸ்ட் ஃபேமிலி”

 


எவ்வளவு அழகான அனுபவங்கள்.. அழுத இடங்கள் பல.. “டூரிஸ்ட் ஃபேமிலி” ஒரு மன நிறைவான அனுபவம்..

நமது அகத்துக்குள் ஓர் உடைவு, ஓர் அசைவு ஏற்படும் போதுதான் அதனை அனுபவமாகக் கணக்கில்கொள்ள முடியும். தற்கால நமது வாழ்வில் அனுபவங்கள் குறைந்துவிட்டன. சமூக வலைத்தளங்களின் அனுசரணையுடன் அனுபவச் சேகரங்களின் இடத்தைத் தற்போது எதிர்வினைகள் ஆக்கிரமித்துள்ளன. சமகாலத்தில் நமக்கு நேர்ந்த மாபெரும் இழப்பு என இதையே குறிப்பிட முடியும். நமது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றாத எதுவும் உள்ளார்ந்த தரிசனத்துக்கு வழிகோலுவதில்லை. ஒரு நிகழ்வை அதன் போக்கில் ஒழுகிச்செல்ல நாம் அனுமதிப்பதில்லை. நமது கருத்துகளால், ஓயாத எண்ணங்களால், அகந்தையால், எமோஜிக்களால் அன்றாடச் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். பின்னர், அந்த எதிர்வினைகளையே அனுபவம் என்றெண்ணி மயங்குகிறோம்.
சக மனிதருக்காக நமது மனத்தை அகட்டித்தருவதற்கு இந்தக் காலம் இடம் தருவதில்லையா? என்ற கேள்விக்கு,… பதவியால், அதிகாரத்தினால், பணத்தினால் சாதிக்காததை அன்பினால் சாதிக்க முடியும் என மனதுக்கு நெருக்கமான மனிதர்களின் தரிசனத்துடன் நல்ல அனுபவமாக “டூரிஸ்ட் ஃபேமிலி”
“அன்பு ஒன்றே மனங்களை ஆளும்”
க.மோகனதாசன்

No comments:

Post a Comment

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...