Monday, July 24, 2023

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

 "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத்திலிருந்து.. பூவின் வாழ்வை சற்று நுட்பமாக அணுகுவோமா?

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே,
முகந்தொட காத்திருந்தேன்..!
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்,
மணம் கொள்ள காத்திருந்தேன்..!
மகரந்தம் தேடி நுகரும் முன்னே,
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..!
("நல்லை அல்லை..." காற்றுவெளியிடை திரைப்படப் பாடல்)
"காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்"
(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1227
- துன்பம் உண்டாக்கும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்)
அரும்பு : பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை.
நனை - வெளியில் தெரியத்தொடங்கி வெளிச்சத்தில் நனையும் நிலை (நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/9)
முகை – மலரும் நிலையிலுள்ள அரும்பு
முகிழ் – நறுமணத்துடன் மொட்டாகும் நிலை.
மொட்டு – பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை.
போது – மலர்வதற்குத் தயாராகும் நிலை.
மலர் – போது, மொட்டவிழ்தல் நிலை
பூ – முழுமையாகப் பூத்த மலர்
வீ – தரையில் உதிரக் கூடிய நிலையில் இருக்கும் பூ
பொதும்பர்– பூத்துக் குலுங்கும் நிலை. .
பொம்மல் – தரையில் உதிர்ந்த புதுப் பூ
செம்மல் – தரையில் உதிர்ந்த பூ சிவந்து அழுகும் நிலை.
தொகுப்பு : க.மோ.

No comments:

Post a Comment

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...