இது உலகத் தோற்றத்தின் கதை, நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விடயங்களோடு, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மனித பரிணாமத்தின் கதை. அந்த வரலாற்றிலும் பரிணாமத்திலும் தமிழ்ப்பண்பாட்டின் வகிபங்கு பற்றிய கதை. வரலாற்று உண்மைகளை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் மேலும் நம்மை தேடும் விதத்திலும் கூற முடியுமா? நம்மைத் திகைக்க வைக்கிறார் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்கள்.
Sunday, April 12, 2020
Saturday, April 11, 2020
ஆத்திசூடியில் ஒளவை கூறும் வாழ்வியல் நெறிகள்.
அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது.
ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.
மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.
Monday, March 16, 2020
விடுமுறை நாளொன்றில்...
விடுமுறையொன்றின் விலாசம்
மனதை அழுத்திப்பிடித்து வைத்திருக்கின்ற
ஒரு சூழமைதியின் தகிப்பில்
ஆணியடித்து மாட்டப்படுகிறது..
Friday, January 17, 2020
வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரது கூத்துப்பிரதிகளுக்கான அணிந்துரை
பாரம்பரியமெனும் செழுமை நிலத்தில் ஆழ வேரூன்றி நிற்கும் பெருமரமாய் வீர இராசமாணிக்கம் அண்ணாவியார்
பாரம்பரியக்கலைகளின் உள்ளார்ந்த விழிப்பும் தேடலும் உள்ளவர்களது படைப்புலகம் அவர்களது விழிப்பினடியாகவே விரிகிறது. இது இக்கலைசார் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவோருக்கு ஒரு பாதையினையும் உருவாக்கித்தருகின்றது. காலனித்துவம் உருவாக்கிக் கொடுத்த தற்காலிக சௌகரிய கொட்டில்களில் தஞ்சமடையாமல், பாரம்பரிய படைப்புலகை நிர்மாணிக்கும் பெரும் பொறுப்புக்களை சிலர் ஆங்காங்கே நிறைவேற்றியும் வந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரம்பரிய இலக்கியப் படைப்பு வெளியில் தனக்கான படைப்புப் பயணத்தை அப்பண்பாட்டுக்குரிய தன்மைகள் கெடாதவாறு மேற்கொண்டு வருபவர் அண்ணாவியார் வீர இராசமாணிக்கம் அவர்கள்.
Sunday, December 15, 2019
Monday, December 9, 2019
வஞ்சப் புகழ்ச்சி
அதியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது.
Tuesday, November 12, 2019
வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்"
கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...
ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)
சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..
ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...
-
அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை...
-
ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட...
-
பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது... ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்...






