Monday, March 16, 2020

விடுமுறை நாளொன்றில்...


விடுமுறையொன்றின் விலாசம்
மனதை அழுத்திப்பிடித்து வைத்திருக்கின்ற
ஒரு சூழமைதியின் தகிப்பில்
ஆணியடித்து மாட்டப்படுகிறது..

திரும்பத் திரும்ப
வாசித்துப் பார்க்கிறேன்
விடுமுறை என்பதோடு
அச்சடித்திருக்கும் சொல்
விஸ்வரூபமெடுத்து
எதற்கும் என்னை விடுவதாயில்லை..

விடுமுறையில்லாப் பொழுதொன்றில்
இருக்கும் சொல்லின் இருப்பும்
இக்கணத்தில் செயலிழக்க
உன்மத்தமாய் எழும் கேள்விகளால்
பதில்சொல்ல மறுக்கிறது மௌனம்...!

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect