Saturday, March 1, 2025

Diderot effect

 Diderot effect



"நான், என் பழைய அங்கியின் முழுமையான எஜமானனாக இருந்தேன். இப்பொழுது நான், என் புதிய அங்கிக்கு அடிமையாகிவிட்டேன்".
- Denis Diderot (1713–1784)
பிரெஞ்ச் தத்துவஞானி Denis Diderot ஒரு போது, வறுமையில் வாடினார். அவரது மகள் கல்யாணத்துக்குக் கூட பணமில்லாத நிலை. இதைக் கேள்வியுற்ற ரஷ்ய அரசியார் கேத்தரின் அவர்கள்  அவரிடமிருந்த புத்தக சேகரிப்பை பெரும் பணம் கொடுத்து வாங்கினார்.
ஒரே நாளில் Diderot பெரும் செல்வந்தனரானார். மகள் கல்யாணத்தை மிகச் சிறப்பாக நடத்தினார். கூடவே ஒரு விலையுயர்ந்த சிகப்பு அங்கியொன்றும் வாங்கினார்.
விலையுயர்ந்த அங்கி அவரது வீட்டில் அந்நியமாகத் தோன்றியது. அதனால் மற்ற பொருட்களை எறிந்துவிட்டு புதிய விலையுயர்ந்த பொருட்களை வாங்கினார். சிலைகள், அலங்காரப் பொருட்கள் என வீட்டை நிறைத்தார்.
நமக்கு தேவையில்லாத ஒரு பொருள் (சிகப்பு அங்கி) எப்படி தேவைல்லாத பல புதிய பொருட்களையும் வாங்கத் தூண்டுகிறது என்பதற்கு இது ஓர் அருமையான உதாரணமாகும். இதனால் Diderot பெயரால் இது Diderot effect என அழைக்கப்படுகிறது.
சும்மா கடைக்குச் சென்று உடுப்பு வாங்க வேண்டியது, பின்னர் அதையெல்லாம் வைக்க அலுமாரி வாங்க வேண்டியது, அலமாரிகளை வைக்க புதிதாக வீட்டை வடிவமைக்க வேண்டியது, சாகும் வரை கடனாளி ஆக வேண்டியது என்பதன் சுருக்கமே Diderot effect ஆகும்.

No comments:

Post a Comment

Diderot effect

 Diderot effect