கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை பொருளாகவும் இருக்கும்.
கலையின் சிறப்பு
மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் காட்சிகளும், ஓவியங்களும், இனிமையான ஒலியும் மேலும் பல வியப்படையும் அற்புத படைப்புகளும் கலைநிலை கொண்டவையே. கலைகள் பல்வேறு பட்டதாக இருந்தாலும், அழகுகலைக்கு தனிச்சிறப்பு உண்டு. அழகுகலையை இன்கலை, கவின்கலை, நற்கலை என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு இருந்தன.
மனிதனுடைய மனதில் உணர்ச்சியினை தோற்றுவித்து புலன்களுக்கு இன்பத்தினை ஏற்படுத்தும் பண்பு கொண்டது அழகு கலையாகும். காட்சி திறனாலும், கற்பனை திறனாலும் அழகு கலையை உருவாக்குபவன் நிறைவான இன்பத்தை காண்கிறான்.
அவ்வாறு படைப்பவன், அறிவில் அனுபவ தெளிவும், தன்னம்பிக்கை உடையவனாக திகழ்கிறான். அழகு கலைகளை அற்புத படைப்பாக அமைப்பவனே கலைஞன் என்ற சிறப்புக்கு பெருமையுடையவனாகிறான். கலை நுணுக்கத்தையும், அம்சத்தையும் விரும்பாத மனிதன் இயந்திர பொம்மை போன்றவனாவான். தன்னிச்சையாக யோசிக்கும் ஆற்றல் இல்லாதவனாவான். சிந்தனையை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளும் கலைஞன், தன் படைப்பில் கற்பனைத் திறனை அதிகரித்து கலையில் பல்வேறுபட்ட வளர்ச்சியை உருவாக்குகிறான்.
Copied from: https://www.tamizhdb.com

Super sir
ReplyDelete