Tuesday, December 13, 2022

தகவல் தொடர்பியலின் மாற்ற வரலாறு

 

தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும்மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றமாகும். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை மனிதன் தகவல் பரிமாற்றத்துக்கு இதுவரை பயன்படுத்தியிருக்கின்றான்

Sunday, December 4, 2022

கதிரவன் த. இன்பராசாவின் அப்பாவின் ஆரிராரோ

 


அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் தொன்று தொட்டு வந்த மரபாகும். குழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

Saturday, December 3, 2022

வேலை

 

சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.

இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

நோய் நொடி

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?



நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.  

நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே. 

உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.

-மகுடேசுவரன்

Diderot effect

 Diderot effect