Thursday, June 20, 2019

நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க...

ரிஷி வித்ஞானியின் "அரோகரா" கவிதை நூலுக்கான அணிந்துரையிலிருந்து....


       நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க மௌனமான ஆர்ப்பரிப்பு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வேலையை கவிதை கச்சிதமாகச் செய்துவிடுகிறது. உள்ளதிலிருந்து உணர்ந்ததைச் சொல்வதும் உணரச் செய்வதும் கவிதையாகின்றது. இதனாலேயே கவிதையினை தம்முணர்வின் ஊடகமாகவும் தம்மை ஆக்கிரமிக்கும் அவஸ்தைகளின் பாசையாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். காலத்தின் கைகளாலும் சில சூழ் நிலைச் சிக்கல்களின் நகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறிப் போய்க் கிடக்கின்ற மனங்களின் வார்த்தைகளை எடுத்து  பலர் கவிதை புனைய முனைகின்றனர். சிலவை வெறும் கூக்குரல்களாகவும் சிலவை ஆத்மாவின் வேர் சென்று உசுப்பி விடுகின்ற விசாரணைகளாகவும் அமைந்துவிடுகின்றன. 

"இறைநிலையுடன் இரண்டறக் கலப்பதற்கு இசை என்ற யோக முறை"

கிரான்குளம் பாலமுருகன் புகழ்பாடும் , கவிஞர் ஜீ. எழில்வண்ணனின் "வேல்நாதம்" இறுவட்டுக்கான அறிமுகவுரை


    சிறகுகளைக்காப்பாற்றிக்கொள்ள பூக்கள் பக்கமே திரும்பாத வண்டு, வேர்களை வாரிச்சுருட்டி தண்ணீரைப்பார்த்து நடுங்கும் மரம், சூரியக்குச்சி எங்கே உரசி விடுமோ என்று உருண்டு உருண்டு ஓடப்பார்க்கும் பூமி, சமூக வலைத்தளங்களில் தொலைந்து போன மனிதர்கள் என அடுக்கடுக்காய் எம்மை சூழ்ந்து நிற்கின்றன அவலங்கள். மௌனச் சுமையுடன் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது நேரத்தின் அவசியமும் கூட. எண்ணற்ற ஞாபகங்கள், பிள்ளைப் பிராயத்து உடைமைகள், முன்னோர் சேர்த்து வைத்த முதுசங்கள், மண்ணின் மகிமைகள், இயற்கையின் இதங்கள், ஊரின் உன்னதங்கள், ஒன்றிணைக்கும் நம்பிக்கைள் என எல்லாவற்றையும் போக்கற்ற ஒரு பெரு வலியின் நடு வழியில் கிடத்திவிட்டு ஒரிரு பெருமூச்சுக்களுடன் மட்டும் கடந்து செல்ல முடிகிறது எம்மால்.

Friday, June 14, 2019

துயரங்களின் பெருமூச்சுச் சுவாலைகளிலிருந்தே எல்லோருக்குமான பிரியங்களை சமைக்க முயன்றிருக்கிறார்...

மெய்யநாதன் கேதீஸ்வரனின் 'சகதிப்புழுக்கள்' நாடகத்திற்கான அறிமுகக்குறிப்பு...  

  அரங்கின் முக்கிய மூலமாக நாடக ஆசிரியர் விளங்குகின்றார். அரங்க நிகழ்வில் அவர் நேரிடையாக பங்குபெற்றாலும், பெறாவிடினும் அவருடைய எழுத்து வடிவில் உள்ள நாடகப் பனுவல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்நாடகப் பனுவலானது வாசகருக்கோ அல்லது பார்வையாளருக்கோ செய்தியினைக் கூறும் பொருட்டே படைக்கப்படுகின்றன என்றாலும் இவை ஒலி, சைகை, படம், வசனம், எழுத்து எனப் பல வடிவத்தில் அமைந்த எண்ணிறைந்த குறிகளின் ஒருங்கிணைவால் கட்டப்படுகிற பனுவல்கள் எனலாம். இவ்வகையான நாடகப் பனுவல் கவிதை வடிவிலோ அல்லது வசன வடிவிலோ இரண்டும் சேர்ந்த வடிவத்திலோ எழுதப்படுகின்றன. 

Friday, June 7, 2019

நவீன அரங்கில் காட்சியமைப்பு

   ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட்புலக் கூறுகள் மிக முக்கியமாகும். ஆகவே காட்சியமைப்பு முக்கியமாகின்றது. காட்சியமைப்பு சூழலையும் கதையுடன் ஒன்றிப்பதற்கான மனநிலையையும் கதையின்/பாத்திரத்தின் நிலையையும் கதைப்பின்னணியையும் காட்டி நிற்கின்றது.

Thursday, June 6, 2019

நாடகங்களில் ஒப்பனை


பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது...

    ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்களைப் பூசுதல் ஒப்பனை எனப்படும். ஒப்பனையானது அரங்கின் தொடக்க காலத்திலிருந்தே முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. ஆக ஒப்பனைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சுருக்கமாக, வரலாற்று ரீதியாக ஒப்பனையினை விளங்கிக் கொண்டு ஒப்பனையின் நுணுக்கங்களையும் அதனை எவ்வாறு பாரம்பரிய அரங்குகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்த்தல் சிறப்பாக அமையும்.

Tuesday, June 4, 2019

'நானிலம் யாவுமோர் நாடக மேடையே ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்'

மதங்கசூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்


  தத்தமது கருத்துரைக்கும், கட்டுரைக்கும், நாடக மேடைக்கும் சேக்ஸ்பியரைப் பயன்படுத்தி வரும் இலக்கிய உலகில் அந்த ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணுகிப்பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். சுவாமிகளின் பன்மொழி அறிவையும் இலக்கிய ரசனையையும் ஆய்வுக் கண்ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத்தும் உயரிய நூல்தான் மதங்கசூளாமணி. இந்த ஒப்பியல் நோக்கு பற்றிய ஒரு பார்வையாக இந்த உரையானது அமைகிறது.

Diderot effect

 Diderot effect